Wednesday, July 31, 2013




மயக்குதே! 

என்னை மயக்குதே! 

மயக்குதே! 








என்னை மயக்குதே!
ஆவாரம்பூ மஞ்சலும் கொத்தமல்லி வாசமும்
                                    மயக்குதே….எனை மயக்குதே
தைமாசக்குளிரும் அதில் நின்ற மரங்களும்
                                   மயக்குதே….எனை மயக்குதே
சோளக்காடும் அதில் போர்த்திய பனியும்
ஊர்வேலங்காடும் அதன் ஒத்தையடிப்பாதையும்
                                  மயக்குதே….எனை மயக்குதே
காதலி விழியோரப் பார்வையைவிட
பொன்வண்டும் தும்பிகளின் சிறகடிப்பும்
மயக்குதே….எனை மயக்குதே
       மாங்குயிலும் மழைக்குருவியும் போல்                                           
தமிழ் விரகனின் இயற்கை வர்ணனையெனை
மயக்குதே….எனை மயக்குதே


Friday, July 26, 2013

சுற்றுச்சூழல்

புரி கடற்கரை 


சமுதாயம் ஒரு குருடு
சொல்லாமல் சொன்னது
            












புரி கடற்கரையில் ஒரு கலைஞர்மணற்சிற்பம்உருவாக்கியிருந்தது, என்னைக்கவர்ந்தது.


அதுவும் இந்தக்குருட்டுசமுதாயத்தைச்சாடியிருந்தது, பளிச்சென்றிருந்தது. மக்கள் கண்ணிருந்தும் குருடர்களாய் இருக்கிறார்கள். ஒருவர் ஒன்றைச்செய்தால் அதையே செய்வது, தனக்கென்று ஒரு பாதை அமைத்துக்கொள்ளாதது, விழிப்புணர்வு இல்லாமை, இயற்கையில் பின்விளைவுகளை உணராது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, சமுதாயப்பொறுப்புணர்வு இல்லாமை, இப்படி எத்தனையோ சொல்லலாம். இதையெல்லாம் இந்த மணற்சிற்பம் சாடுகிறது. ஒரு கலைஞனுடைய படைப்பு இப்படித்தான் சமுதாயத்தை நல்வழிக்கு திருப்பிவிடவேண்டும். படைப்புகளை வெறும் பொழுதுபோக்குக்காக படைக்கக்கூடாது. பூமியில் மூன்றில் ஒரு பாகமான நீலக்கடல் அசுத்தமாக விடக்கூடாது. ஆனால் எண்ணைக்கசிவு, சாக்கடைக்கால்வாய், அணுக்கழிவு, சாயக்கழிவு, பிளாஸ்டிக்கழிவு என கடலைச்சீரழிக்கிறோம்.

            நண்பர் கையில் அவரை அறியாமலேயே ஒரு தூக்குப்பை(Carry Bag), ஒரு நீர் போத்தல்(Water Bottle).இப்படித்தாம் இப்போது மக்கள் உலவுகிறார்கள்.இந்த பிளாஸ்டிக் சமாச்சாரங்கள் சுற்றுச்சுழற்சி என்ற சமுதாயப்பொறுப்புணர்வு அற்று, பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து, அரசுகண்ணிருந்தும் பாராமல், இப்படி இயற்கையை நாசம் செய்கிறார்களே என்ற ஆதங்கத்தை இந்த மணற்சிற்பம் சொல்லாமல் சொல்கிறது.